சூர்யாவுக்கு இணையானவர் நயன்தாரா. பாண்டிராஜ் புகழாரம்

சூர்யாவுக்கு இணையானவர் நயன்தாரா. பாண்டிராஜ் புகழாரம்
Nayanthara_Manirathnam
சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு வழக்கமான சிம்பு படங்களைவிட அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த படம் கண்டிப்பாக சிம்புவின் வெற்றிப்பட பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் முக்கிய பலமே கதாநாயகிதான். நயன்தாரா தற்போது தென்னிந்திய திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பதால் இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் நயன்தாராவின் நேரம் தவறாமை குறித்து இயக்குனர் பாண்டிராஜ் புகழ்ந்து தள்ளியுள்ளார்.  காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் அவர் சரியாக 8.50க்கே படப்பிடிப்புக்கு அனைவரையும் அசத்துவார். கோலிவுட் திரையுலகில் சூர்யாவுக்கு பின் படப்பிடிப்புக்கு நேரந்தவறாது வருபவர் நயன்தாரா மட்டுமே. எனவே நயன்தாராவை சூர்யாவுக்கு இணையானவர் என்று கூறலாம்’ என்று பாண்டிராஜ் கூறியுள்ளார்.

Leave a Reply