செயலி புதிது: நடந்தால் காசு தரும் செயலி
உடற்பயிற்சி செய்வதைக் கண்காணிக்கவும், ஊக்குவிக்கவும் வழி செய்யும் ஸ்மார்ட்போன் செயலிகள் பல இருக்கின்றன. இந்த வரிசையில் அறிமுகமாகியிருக்கும் புதிய செயலி ஒன்று முற்றிலும் புதுமையான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது.
‘ஸ்வெட்காயின்ஸ்’ எனும் அந்தச் செயலி, உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வதற்கு ஏற்ப டிஜிட்டல் நாணயங்களைப் பரிசாக வழங்குகிறது. இந்த டிஜிட்டல் நாணயங்கள்தான் ‘ஸ்வெட்காயின்ஸ்’ என குறிப்பிடப்படுகிறது. ஆயிரம் அடிகள் நடந்தால் ஒரு நாணயம் பெறலாம். இவ்வாறு நடையாக நடந்து சேமிக்கும் டிஜிட்டல் நாணயங்களை ஃபிட்னஸ் சேவை சார்ந்த பொருட்களை வாங்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பிரிட்டனில் முதல் கட்டமாக ஐபோன்களில் இந்தச் செயலி அறிமுகமாகி உள்ளது. அடுத்த கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வரவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:https://sweatco.in/int