அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு?

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்கள் எவ்வளவு?

1-doctor (1)தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இன்று முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நுழைவுத் தேர்வு இன்றி வழக்கம்போல் நிரப்பப்படும் இடங்கள் குறித்த எண்ணிக்கை கீழே அளிக்கப்பட்டுள்ளது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் அளிக்கும் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களில் பிளஸ் 2 மதிப்பெண், கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

எனினும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

தமிழகத்தில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள்–2,650

20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள்

(மாநில ஒதுக்கீடு)——————————— 2,253

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு

உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள்———————- 397

6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலிருந்து கிடைக்கும்

அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்———–}} 470

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக்

கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடங்கள்—————– 65

சென்னை பாரிமுனை அரசு மருத்துவக் கல்லூரியில்

உள்ள பி.டி.எஸ். இடங்கள் (மாநில ஒதுக்கீடு)———- 85

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய பி.டி.எஸ். இடங்கள்-}15

17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில்

அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள்——— 970

பொதுநுழைவுத்தேர்வு மூலம்: 6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 290 நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 640 நிர்வாக ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள்

ஆகியவை பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படும்.

Leave a Reply