இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து முன்னேற்றம்!

இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து முன்னேற்றம்!

share
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (26.05.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவிகிதமாக அதிகரிக்கும் என சிட்டி குழுமம் கணிப்பு, மோர்கன் ஸ்டான்லி இந்தியா குறித்த மதிப்பீடு, தனியார் நிறுவனமான ஸ்கைமெட் பருவமழை நன்றாக பெய்யும் என கருத்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் நேற்றைய இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்தது.

இதன் எதிரொலியாக இன்றும் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இன்று எப் அண்ட் ஓ எக்ஸிபியரி இருப்பதால் சந்தை ஏற்ற, இறக்கத்தில் வர்த்தகமாக வாய்ப்பு இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 162.24 புள்ளிகள் உயர்ந்து 26,043.82 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 43.60 புள்ளிகள் உயர்ந்து 7978.90 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

லார்சன் 1,415.25 9.57%
ஐடியா செல்லுலார் 113.75 3.83%
பி.எச்.இ.எல் 125.30 2.24%
அம்புஜா சிமென்ட்ஸ் 227.30 2.20%
ஓஎன்ஜிசி 213.70 1.69%

விலை குறைந்த பங்குகள்

பார்தி இன்ப்ராடெல் 389.55 -1.34%
சன் பார்மா 775.95 -1.21%
என்டிபிசி 140.55 -0.92%
BPCL 910.55 -0.75%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 148.70 -0.67%

Leave a Reply