‘இது நம்ம ஆளு’ வெற்றி பெற்றால் எனக்கு சிக்கல்தான். சிம்பு
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘இதுநம்ம ஆளு’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து சிம்பு பேட்டி ஒன்றில் இந்த படம் வெற்றி பெற்றால் தனக்கு தனிப்பட்ட முறையில் சிக்கல் ஏற்படும் என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். இதுவரை திருமணம் செய்வது குறித்து நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் ஆனால் இது நம்ம ஆளு’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் எனக்கு மிக விரைவில் திருமணம் நடந்துவிடும் என்று தோன்றுவதால் பயமாக இருப்பதாக சிம்பு கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் வரும் என்னுடைய கேரக்டர் சிவா போன்ற கணவர் தங்களுக்கு வேண்டும் என பல இளம்பெண்கள் ஏங்கும் அளவுக்கு இந்த கேரக்டரை பாண்டிராஜ் உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இந்த படத்தின் வெற்றியால் எனக்கு விரைவில் திருமணம் நடந்துவிடும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது என்றும் ஒருவேளை ஓரிரு மாதங்களிலேயே திருமணம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே சிம்பு ரசிகர்கள் விரைவில் அவருடைய திருமண தேதியை எதிர்பார்க்கலாம்…
‘சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகும் அடுத்தடுத்த நாட்கள்