1200 பயணிகளுடன் கார்களுக்கு மேலே செல்லும் வித்தியாசமான பஸ். சீனாவில் அறிமுகம்
இந்தியா உள்பட பல நாடுகளில் இயங்கி வரும் பஸ்களில் அதிகபட்சமாக ஐம்பது பயணிகள் வரை பயணிக்க முடியும் என்ற நிலையில் 1200 பயணிகள் செல்லும் பிரமாண்டமான பஸ் விரைவில் சீனாவைல் இயங்கவுள்ளது.
60.60 மீட்டர் நீளம், 7.80 மீட்டர் அகலம், 4.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரமாண்டமான பேருந்துகள் பேட்டரிகளில் இயங்கும். இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் டிராம் தண்டவாளம் போன்ற இருப்புப் பாதையில் இந்த பேருந்து செல்லும்போது, சாலைகளில் ஓடும் கார்போன்ற சிறிய வாகனங்களை மோதாமல் ஏறி கடந்து செல்லும் வகையில் இந்த பஸ்களின் உள்கட்டமைப்பு இருக்கும்.
சுரங்கப்பாதை போன்ற வடிவிலான இந்த பஸ்சின் தயாரிப்பு செலவு ஒரு சுரங்கப்பாதையை கட்டுவதற்கான செலவில் ஐந்தில் ஒரு பங்காக மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் இந்த பஸ்கள் நிற்கும்போது விமானத்தில் இருப்பதைப் போன்ற படிக்கட்டுகள் பக்கவாட்டில் இறங்கும். அதன் வழியாக பயணிகள் ஏறி, இறங்கலாம்.
இந்த வித்தியாசமான பேருந்து வடக்கு சீனாவில் உள்ள ஹேபேய் மாகாணத்தில் இந்த ஆண்டு இறுதியில் சோதனை அடிப்படையில் இயங்கவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு முதல் இந்த பேருந்து பயணிகளுக்காக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.