ஹிரோஷிமாவில் அஞ்சலி செலுத்திய முதல் அமெரிக்க அதிபர்
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாமி ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் எந்த ஒரு அமெரிக்க அதிபரும் ஹிரோஷிமா நகருக்கு வருகை தராத நிலையில் தற்போது முதல்முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமா ஹிரோஷிமா நகருக்கு சென்று அங்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டாலும், இந்த சம்பவம்தான் இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது என்பதால் ஒபாமா இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்கவில்லை. இருப்பினும் ஹிரோஷிமாவில் ஒரு சிறிய உரையை நிகழ்த்த அவர் நினைத்ததாகவும் ஆனால் வெள்ளை மாளிகை கொடுத்த அழுத்தத்தினால் அவர் உரையை நிகழ்த்தாமல் திரும்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களின் வாக்குகளை பெறவதற்காகவே ஒபாமா ஹிரோஷிமா சென்றுள்ளதாகவும் ஒருசில விமர்சனங்களும் எழுந்துள்ளன.