வடகொரியாவின் முக்கிய ஏவுகணை சோதனை தோல்வி.

வடகொரியாவின் முக்கிய ஏவுகணை சோதனை தோல்வி.
north korea
அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை, ஹைட்ரஜன் சோதனை என தொடர்ந்து அபாயகரமான சோதனை செய்து வரும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வடகொரியா தன்னுடைய நிலையில் இருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை.

இந்நிலைய்ல் வட கொரியாவின் முசுடான் ஏவுகணை சோதனை நான்காவது முறையாக செய்ததாகவும் ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிந்ததாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.

ஒரு பக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த வந்தபோதிலும் இன்னொரு பக்கம் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியா அதிரடியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்ஜின் சோதனையை நடத்தியுள்ளது. அதேபோல் சமீபத்தில் முசுடான் என்னும் ஏவுகணையை வடகொரியா உருவாக்கியது. இதன் மூலம், அமெரிக்காவுக்கு அணுகுண்டுகளை சுமந்து சென்று ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஆற்றலை அந்நாடு பல்வேறு கட்டங்களாக அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வடகொரியாவின் சக்தி வாய்ந்த முசுடான் ஏவுகணை சோதனை நேற்று நடத்தப்பட்டதாகவும் ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தென்கொரியா செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருந்தால் அமெரிக்க ராணுவ தளம், ஆசியா, பசுபிக் நாடுகள் ஆகியவற்றை தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply