மாநிலங்களவை தேர்தலில் திடீரென வேட்புமனு தாக்கல் செய்த ப.சிதம்பரம்
முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று திடீரென மாநிலங்களைவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ள ஒரே ஒரு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான், அம்மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் ஆகியோர்களுடன் சற்று முன்னர் விதான் பவன் சென்ற ப. சிதம்பரம், மாநிலங்களவைத் தேர்தலுக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர்களுடன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் உடன் இருந்தார்.
கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத சிதம்பரம் தற்போது மாநிலங்களவை மூலம் பாராளுமன்றத்திற்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.