மறுவாக்கு கோரிக்கை. திருமாவளவனின் கோரிக்கையை நிராகரித்தார் ராஜேஷ் லக்கானி

மறுவாக்கு கோரிக்கை. திருமாவளவனின் கோரிக்கையை நிராகரித்தார் ராஜேஷ் லக்கானி

thirumavalavanநடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கை தொடங்கியவுடன் ஆரம்பத்தில் இருந்தே இழுபறியில் இருந்த திருமாவளவன் வெறும் 87 வாக்குகளில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியில் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று அவர் நேற்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து திருமாவளவன் கூறியதாவது, “வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாகவும், வாக்குச்சாவடி எண் 81ல் முறையாக வாக்குப்பதிவு நடக்கததாலும் தாம் தோல்வியுற்றதாகவும், எனவே ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு மற்றும் அத்தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.

ஆனால் திருமாவளவனின் கோரிக்கையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிராகரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய ராஜேஷ் லக்கானி, “வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பிறகு, அதில் மற்ற வேட்பாளர்களுக்கு அதிருப்தி மற்றும் ஆட்சேபம் இருந்தால், நீதிமன்றம் மூலமே மட்டுமே தீர்வுகாண முடியும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply