சபாநாயகர்-துணை சபாநாயகர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்
தமிழக சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
சபாநாயகர் பதவிக்கு ப.தனபால் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த இரண்டு பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.