லண்டனை அடுத்து துபாயிலும் பினாமி சொத்து? வதேரா-சஞ்சய் பண்டாரி மீதான பிடி இறுகுகிறது

லண்டனை அடுத்து துபாயிலும் பினாமி சொத்து? வதேரா-சஞ்சய் பண்டாரி மீதான பிடி இறுகுகிறது
vadra
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வதேராவுக்கும் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாகவும், லண்டனில் உள்ள வதேராவின் பினாமி சொத்துக்களை சஞ்சய் பண்டாரி பராமரித்து வருவதாகவும் கடந்த சில நாட்களாக செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வதேராவுக்கு துபாயிலும் பினாமி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சஞ்சய் பண்டாரிக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் சஞ்சய் பண்டாரி தனது சொத்துக்கள் குறித்த முழு விபரங்களை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பண்டாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

பண்டாரி சொத்து குறித்த தகவல் அளித்த பின்னர் அவர் மீதான பிடி இறுகும் என்றும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்ய வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

சஞ்சய் பண்டாரிக்கு லண்டன், துபாய் மட்டுமின்றி சுவிட்சர்லாந்து உள்பட மேலும் சில நாடுகளிலும் சொத்துக்கள் இருப்பதாகவும், அந்த சொத்துக்களுக்கும் ராபர்ட் வதேராவுக்கு சம்பந்தம் இருக்கின்றதா என்பது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.

Leave a Reply