தலைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?

தலைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?

cocunutதேங்காய் எண்ணெய் தடவினால், முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளரவைக்கும் ஆற்றல் அதற்கு இல்லை. ஆனால், தலைமுடியின் ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தி பாதுகாக்கத் துணைபுரிகிறது.

தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் காரணமாக, தலைமுடியிடையில் பாக்டீரியா வளர்வது தடுக்கப்படுகிறது.

தலையில் தேங்காய் எண்ணெய் வைப்பதால், தலையின் மேற்பகுதித் தோல் மற்றும் முடி இரண்டும் உலர்ந்துபோவது தடுக்கப்படும்.

தேங்காய் எண்ணெயை கை, காலில் தேய்த்துவிட்டு பெயருக்குத் தலையின் மேற்பரப்பில்படும்படி தேய்ப்பது தவறான முறை. தலையின் மேற்பகுதித் தோலில் (Scalp) படியும்படி நன்றாகத் தேய்க்க வேண்டும்.

உலர் சருமம் மற்றும் வலுக் குறைந்த தலைமுடி கொண்டவர்கள், தலைமுடி உதிரும் பிரச்னை இருப்பவர்கள் இரவு படுக்கும்போதே தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டுப் படுக்க வேண்டும். காலையில் எழுந்து தலைக்குக் குளிக்க வேண்டும்.

ஆரோக்கியமான தலைமுடி கொண்டவர்கள், தலைமுடியைப் பாதுகாக்க விரும்புபவர்கள் தினமும் காலை குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகத் தலைக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு தலைக்குக் குளிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்துக் குளிக்கும்போது, ஷாம்புக்களைப் பயன்படுத்துவது தவறு. ஷாம்புவில் இருக்கும் வேதிப்பொருட்கள் தேங்காய் எண்ணெயின் பணிகளைத் தடுக்கும். எனவே, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

Leave a Reply