உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்ற பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்ற பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Supreme-Court
உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 56 இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 24-ஆம் தேதிக்குள் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 56

பணி: Steno-Typist
காலியிடங்கள்: 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800

பணி: Computer Operator
காலியிடங்கள்: 03
தகுதி: கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அலலது அதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் இளநிலை தட்டச்சு பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Typist
காலியிடங்கள்: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: Junior Assistant
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பணி: Senior Bailiff
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியிடன் கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Examiner & Reader
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Bailiff
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Xerox Operator
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 – 10,000 + தர ஊதியம் ரூ.1,650
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மாதம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistants
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.4,800 – 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: 8-ஆம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Night Watchman cum Masalchi, Masalchi
காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.4,800 – 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 – 35க்குள்ளும், எம்பிசி, பிசி பிரிவினருக்கு 18 – 32க்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ecourts.gov.in/tn/thenilgiris என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்று செய்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

THE DISTRICT JUDGE,

UDHAGAMANDALAM – 643 001,

THE NILGIRIS DISTRICT.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/RECRUITMENT%20%20IN%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply