கொய்யா இலை பஜ்ஜி

கொய்யா இலை பஜ்ஜி

4
என்னென்ன தேவை?

கடலை மாவு – ஒரு கப்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

துளிர் கொய்யா இலை – 15

மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயம், மஞ்சள் தூள், இவற்றுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். கொய்யா இலைகளை மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். பஜ்ஜி மாவுடன் துருவிய பாதாம், முந்திரி, சிறிது பால் பவுடர் கலந்தும் பஜ்ஜி செய்யலாம்.

Leave a Reply