சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் போட்டியை திட்டமிட்டே ஏற்பாடு செய்தோம். ஐசிசி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் போட்டியை திட்டமிட்டே ஏற்பாடு செய்தோம். ஐசிசி
icc-trophy
2017ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி சாம்பின்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் 2017-ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ளன. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திட்டமிட்டு வேண்டுமென்ற இந்த இரு அணிகளையும் ஒரே பிரிவில் சேர்த்ததாக ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்தியா பாகிஸ்தான் அணிகளை ஒரே பிரிவில் வேண்டும் என்றேதான் நாங்கள் ஒரே பிரிவில் சேர்த்துள்ளோம். இரு அணிகளும் மோதும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது. பெரும் பிரபலம் ஆகிறது. ரசிகர்களும் அதிக அளவில் போட்டியை காண மைதானத்துக்கு வருவார்கள். சர்வதேச அளவில் இந்த இரு அணிகளும் மோதும் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது” என்றார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பைப் போட்டியிலும், டி-20 உலகக் கோப்பைத் தொடரிலும் இரு அணிகளும் ஒரே பிரிவில்தான் இடம் பெற்றிருந்தன.

Chennai Today News: Champion Trophy: India and Pakistan in B section

Leave a Reply