பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கார்பின் முகுருஜா, ஜோகோவிச் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கார்பின் முகுருஜா, ஜோகோவிச் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

garbine-muguruzajpg.jpg.size.custom.crop.1086x724 hi-res-70f1adc983a978b872fad609ce2fc21c_crop_northபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் செரினா வில்லியம்ஸை ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜாவும் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றார். முதல் நிலையில் உள்ள செரீனாவை நான்காம் நிலையில் உள்ள முகுருஜா வீழ்த்தி சாதனை புரிந்தார். இதுவே இவரது முடஹ்ல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான ஆண்கள் பிரிவில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் செர்பியா நாட்டின் ஜோகோவிச்

முதல் சுற்றில் 6-3 என்ற செட் கணக்கில் முர்ரே முன்னிலை வகித்தாலும் அதன்பின்னர் சுதாகரித்து ஆடிய ஜோகோவிச் இரண்டாவது சுற்றை 6-1 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 6-2 என்ற கணக்கிலும் வென்றார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் 6-4 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றினார். இதன் மூலம் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றுள்ளார்.

Leave a Reply