ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு. விசாரணை முடிந்தது. தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு. விசாரணை முடிந்தது. தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட்
jayalalitha
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள அப்பீல் மனு மீதான விசாரணை இன்று  மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கின் அனைத்து தரப்பினர்களின் வாதம் முடிந்ததையடுத்து தீர்ப்பை ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கீழ்நீதிமன்ற தண்டனையை உறுதி செய்ய வலியுறுத்தி கர்நாடகா மற்றும் திமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பினாகி கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த சில மாதங்களாக விசாரணை செய்து வருகிறது.

முதலில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் தரப்பு வாதங்களும், பின்னர் கர்நாடக தரப்பில் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வாதங்களும் முன் வைக்கப்பட்டன. மே 12ம் தேதி நடந்த விசாரணையின் போது, ஜூன் 1ம் தேதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அனைத்து தரப்பு வாதங்களும் முடிக்கப்பட்டு, வழக்கு விசாரணை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் இந்த வழக்கில்  தொடர்புடைய நிறுவனங்களை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது. கடந்த  ஜூன் 1-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா வாதிட்டார். அதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை சார்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும் தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக வைத்தார்.

இந்த விசாரணையின்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம். மேலும், இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையதுதான் என்று நிரூபிக்க முடியுமா? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் கேட்டனர்.

இந்த சொத்தக் குவிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அன்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், சிக்னோரா என்டர்பிரைசஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ் லிமிட்டெட், மிடோ அக்ரோ பார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுமீதான விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply