இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆவாரா ரவிசாஸ்திரி?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி தற்போது காலியாக உள்ள நிலையில் அந்த பதவியை நிரப்ப முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக 18 மாத காலம் பணியாற்றி, சமீபத்தில் நடந்த டி-20 உலக கோப்பையுடன் அந்த பதவியில் இருந்து விடைபெற்ற முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ரவிசாஸ்திரி விண்ணப்பித்து உள்ளார். நேற்று இ-மெயில் மூலம் தேவையான சான்றிதழ்களுடன் ரவிசாஸ்திரி விண்ணப்பித்து இருப்பதாகவும் அவருக்கு இந்த பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீலும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 54 வயதான ரவிசாஸ்திரி இந்திய அணிக்காக 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.