பகவான் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார்

பகவான் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார்
Narasimha Jayanthi Urchavam Kadiri
பகவான் எதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்றால், சர்வ வாஸ்துக்களினுள்ளேயும் அவன் வியாபித்திருப்பதை நாம் உணர்வதற்காகவே. விஷ்ணு புராணத்தில் ஒரு சுலோகத்தில் ஹே விஷ்ணு நாராயணா நீ எப்போதும் எங்கும் பரவியிருக்கிறாய். அது தர்ம சூக்ஷ்மமான விஷயம். ஆனால் அப்படி நீ பரவியிருப்பதை எல்லோரும் உணர வேண்டும் என்பதால் அல்லவா நரசிம்ம அவதாரம் பண்ணினாய் என்று வருகிறது.

நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். காயத்ரியின் மத்தியிலே ஒளிப்பிழம்பாய் இருப்பவன் பகவான் மகா விஷ்ணு. ஆயிரம் நாமம் என்பது யாரைக் குறிக்கிறது? விச்வம், விஷ்ணு என்று சொல்லிக்கொண்டே வந்தோமானால் நரசிம்மனிடத்திலே தான் எல்லாம் போய் முடியும். சகஸ்ரநாமத்தில் முதன் முதலில் சொல்லப்பட்ட அவதாரம் எது என்றால் நரசிம்ம அவதாரம் தான்.

சகஸ்ரநாமத்தின் நடுவிலும் நரசிம்மனே பேசப்படுகிறான். நரசிம்மன் இருக்கிற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயரும் நின்று கொண்டிருக்கின்றான். நரசிம்மனை பார்த்து ஸ்ரீ நரசிம்ஹாய நம என்று ஒரு புஷ்பத்தை போட்டு அர்ச்சனை செய்து அவனை தியானம் செய்தால் எல்லா பிரம்ம வித்தையும் கிடைத்த பலன் நமக்கு உண்டாகும். அனைத்து பிரம்மவித்தைகளின் நிலைகளும் அந்த பரமாத்மா தான்.

யார் தன்னை உபாசிக்கிறார்களோ அவர்களுக்கு பலனை கொடுக்கக்கூடியவன் நரசிம்மன். அடித்த கை பிடித்த பெருமாள் என்று பெயர் அவனுக்கு. எங்கடா என்று அடித்துக் கூப்பிட்டால் இதோ என்று வந்து நம் கையை பிடித்துக்கொள்வான். வேறு எந்த அவதாரத்திலாவது இந்த அதிசயம் உண்டா.

Leave a Reply