உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் தொடர்ந்து 6வது முறையாக ஏஞ்சலா மெர்க்கல்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் தொடர்ந்து 6வது முறையாக ஏஞ்சலா மெர்க்கல்


womanஅமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலை கடந்த சில வாரங்களாக எடுத்து வந்த நிலையில் தற்போது இந்த பட்டியலின் முடிவை வெளியிட்டு உள்ளது. 11வது முறையாக ஃபோர்ப்ஸ் எடுத்திருக்கும் இந்த பட்டியலில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்த்ல் உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பட்டியலில் முதன் முறையாக ஸ்காட்லாந்து அரசியல்வாதியான நிக்கோலா ஸ்டர்ஜியன் இடம் பிடித்துள்ளார். இவர் இந்த பட்டியலில் 50-வது இடத்தில் உள்ளார்.

ஏஞ்சலா மெர்கலுக்கு அடுத்த இடத்தில் அதாவது இரண்டாவது இடத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் உள்ளார். மூன்றாவது இடத்தில் அமெரிக்க மத்திய வங்கிகளுக்கான முதன்மை அதிகாரியாக பணியாற்றிவரும் ஜேனட் யெல்லென் என்பவர் உள்ளார்.

4வது மற்றும் 5வது இடங்களில் பில்கேட்ச் மனைவி மெலிண்டா கேட்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டோர் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான மேரி பர்ரா ஆகியோர் உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மீச்செல் 13வது இடத்திலும், இவரை அடுத்து 14 வது இடத்தில் இந்திரா நூயி உள்ளார். இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் அருந்ததி பட்டாச்சார்யா 25 வது இடத்தில் உள்ளார். மியான்மர் ஆங் சான் சூ கி 26 வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து மகாராணியார் 29-வது இடத்திலும் உள்ளனர். ராணி எலிசபெத் கடந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் 49வது இடத்தில் இருந்தார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 36 வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்தவர்கள் பின்வருமாறு:
1 Angela Merkel

2 Hillary Clinton

3 Janet Yellen

4 Melinda Gates

5 Mary Barra

6 Christine Lagarde

7 Sheryl Sandberg

8 Susan Wojcicki

9 Meg Whitman

10 Ana Patricia Botín

Leave a Reply