ஒரே நேரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய தாய்-மகள் தேர்ச்சி
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் ஒரே சமயத்தில் தாய்-மகள் இருவரும் சேர்ந்து 10ஆம் வகுப்பு தேர்வை கடந்த மார்ச் மாதம் எழுதினர். இதில், இருவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சரிதா ஜகடே என்ற 43 வயது மும்பை பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10ஆம் தேர்வில் சரிதாவும் அவரது மகள் ஸ்ருதிகாவும் கலந்து கொண்டனர். இதில் தாய் சரிதா 44 சதவீத மதிப்பெண்களும், அவரது மகள் சுருதிகா 69 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக சரிதா 4-ம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்தி விட்டார். ஆனால் மகள்கள் கொடுத்த ஊக்கத்தால் சரிதா இரவுப்பள்ளியில் படித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 8ஆம் வகுப்பும் தற்போது 10ஆம் வகுப்பும் பாஸ் செய்துள்ளார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பள்ளி செல்வதற்குப் பயமாக இருந்தது. ஆனால், என் கணவர் ஊக்கம் கொடுத்தார். பிடித்தால்தான் போவேன், இல்லாவிட்டால் நின்று விடுவேன் எனக் கூறினேன். ஆனால், சில நாட்களிலேயே படிப்பது பிடித்துப் போயிற்று” என்று சந்தோஷமாக சரிதா கூறியுள்ளார்.
சரிதாவின் இன்னொரு மகள் 12ஆ, வகுப்பு தேர்வெழுதி 48 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக மூவருமே இரவு முழுவதும் கண்விழித்து படித்து தற்போது அதன் பயனை பெற்றுள்ளனர்.