ராகுல்காந்தி ஒரு சிறுவன். அவரால் எதையும் புரிந்துகொள்ள முடியாது. மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராகுல்காந்தி ஒரு சிறுவன். அவரால் எதையும் புரிந்துகொள்ள முடியாது. மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

rahul gandhiவரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளவரும் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளவருமான ராகுல்காந்தியை மத்திய அமைச்சர் ஒருவர் சிறுவன் என பேசியுள்ளது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சி, ராஜஸ்தானின் கோடா நகரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா, மத்திய எரிசக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் உள்பட பல பாஜக தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா, “ புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதற்காக கல்வியாளர்களிடம் சம்பந்தப்பட்ட துறை ஆலோசனை நடத்தி வருகிறது. அதேநேரம், மக்களிடம் இருந்தும் இதுதொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் மத்திய அரசு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ஆனால், அந்தச் சாதனைகளை சிறுவனான ராகுல் காந்தியால் புரிந்துகொள்ள இயலவில்லை” என்று கூறியுள்ளார்.

ராகுல்காந்தியை சிறுவன் என மத்திய அமைச்சர் பேசியுள்ளதை வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பிரச்னையாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply