ரகுராம்ராஜன் இந்திய குடிமகன் தான். ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரகுராம்ராஜன் இந்திய குடிமகன் தான். ரிசர்வ் வங்கி அறிவிப்பு

raguram_rajan_2673939fஇந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் இந்திய குடிமகன் இல்லை என்றும், அவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்பட பலர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ரகுராம்ராஜன் இந்திய குடிமகன் தான் என்றும், அவரிடம் இந்திய பாஸ்போர்ட் தான் உள்ளது என்றும் தற்போது தகவல் அறியும் உண்மை சட்டத்தின் கீழ் பதிலளிக்கப்பட்டுள்ளது.

ரகுராம் ராஜனின் குடியுரிமை பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் இதன் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு முன்னரே ரகுராம் ராஜன் குடியுரிமை குறித்து தகவல் கோரப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்துள்ள ஆர்பிஐ ரகுராம் ராஜன் இந்தியக் குடியுரிமை பெற்றவர் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அவர் கடந்த கால குடியுரிமை பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது .

தனது ஆர்டிஐ மனு குறித்து விளக்கிய டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால், எனது ஆர்டிஐ மனு பல அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் கையில் மாறி மாறி சென்று கடைசியாக மே 11 அன்று ஆர்பிஐ இடம் வந்து சேர்ந்தது என்று கூறியுள்ளார்.

Leave a Reply