‘கபாலி’ படத்தின் பாடல்கள் லிஸ்ட் இதுதான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘கபாலி’ படத்தின் பாடல்கள் வரும் 12ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விழா எதுவும் இன்றி ஆன்லைனில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. இந்லையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. ரஜினி படம் ஒன்றுக்கு சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது
இனி இந்த பாடல்கள் குறித்த விபரங்களை பார்ப்போம்.
1. உலகம் ஒருவனுக்காக’ என்று தொடங்கும் இந்த பாடலை கபிலன் எழுத இந்த பாடலை அனந்து, சந்தோஷ் நாராயணன் மற்றும் கானாபாலா ஆகியோர் பாடியுள்ளனர்.
2. மாய நதி’ என்று தொடங்கும் இந்த பாடலை உமாதேவி எழுத அதை அனந்து, பிரதீப்குமார், ஸ்வேதா மேனன் ஆகியோர் பாடியுள்ளனர்.
3. வீர துரந்திரா’ என்ற இந்த பாடலை உமா தேவி எழுத அதை கானா பாலா, லாரன்ஸ் மற்றும் பிரதீப்குமார் பாடியுள்ளனர்.
4. வானம் பார்த்தேன்’ என்ற இந்த இந்த பாடலை கபிலன் எழுத அதை பிரதீப் குமார் பாடியுள்ளார்.
5. அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியுள்ள ‘நெருப்புடா’ என்ற பாடலில் ரஜினிகாந்த் அவர்களும் இடையிடையே வசனம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மன்னன்’ மற்றும் ‘கோச்சடையான்’ ஆகிய படங்களின் பாடல்களில் ரஜினிகாந்த் வசனம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.