சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ டிராக்லிஸ்ட் இதுதான்
சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ சமீபத்தில் வெளியாகி ஓரளவு சுமாரான வசூலை தந்ததை அடுத்து அவர் நடித்த இன்னொரு படமான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளிவந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் தாமரை எழுதியுள்ளார் என்பதும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1. ஷோக்காலி….என்று தொடங்கும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், ஆதித்ய ராவ், ஏடிகே, ஸ்ரீராஸ்கல் ஆகியோர் பாடியுள்ளனர்.
2. ‘இது நாள்….என்று தொடங்கும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், ஆதித்யா ராவ், ஜொனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர்.
3. ராசாளி…என்று தொடங்கும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், பிரகாஷ், ஷாஷா திருப்பதி ஆகியோர் பாடியுள்ளனர்.
4. அவளும் நானும் என்று தொடங்கும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், சத்யபிரகாஷ், ஷாஷா திருப்பதி ஆகியோர் பாடியுள்ளனர்.
5. தள்ளி போகாதே….என்று தொடங்கும் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், சித்ஸ்ரீராம், ஏடிகே ஆகியோர் பாடியுள்ளனர்.
சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கவுதம் மேனன் தயாரித்து இயக்கியுள்ளார்.