பாரிவேந்தர் ஒரு வள்ளல். இயக்குனர் சங்கத்தின் ஜால்ரா எதற்காக?
எஸ்.ஆர்.எம் கல்லூரி பாரிவேந்தர் மற்றும் மதன் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த கல்லூரியின் முறைகேடுகளை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு சம்பந்தமே இல்லாத தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், பாரிவேந்தருக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை விடுத்துள்ளது. பார்வேந்தரை நல்லவர், வல்லவர், வள்ளல் என்று போற்றி புகழ்ந்து ஜால்ரா அடிக்கும் வகையில் உள்ள இந்த அறிக்கையின் பின்னணி என்னவாக இருக்கும் என கோலிவுட் திரையுலகினர் புரியாமல் உள்ளனர். இதோ தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் விக்ரமன் விடுத்துள்ள அறிக்கை இதுதான்:
பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் அனைத்து ஊடக சகோதர சகோதரிகளுக்கும் தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாகவும் அன்பான வணக்கங்கள்
உங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கும், சமூக தலைவர்களுக்கும், அரசியலமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் நாங்கள் ஒரு செய்தியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
SRM குழுமத்தின் நிறுவனர் திரு.பாரிவேந்தர் அவர்களின் மீது சமீபகாலமாக சில தவறான கருத்துக்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. திரு.பாரிவேந்தர் அவர்கள் எங்களை பொறுத்த வரையில் கருணை உள்ளமும் வள்ளல் குணமும் கொண்டவர்.
அவர் எங்களது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாலர்கள் 25 ஆயிரம் பேருக்கும், எங்களது இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்த 2500 உறுப்பினர்களுக்கும் மற்றும் அவர்களது அம்மா அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என அனைத்து குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவ சிகிச்சைகள் அளிக்கிறார்.
இதய அறுவை சிகிச்சை, மாற்று சிறுநீரக சிகிச்சை, மூளை சம்பந்தப்பட்ட அனைத்து சிகிச்சைகள் உள்ப்ட பல சிகிச்சைகளுடன் மாத்திரை மருந்துகளையும் இலவசமாக அளிக்கிறார்.
அத்துடன் நோயாளிகளுடன் மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக அளிக்கிறார். இதன்மூலம் பலகோடி ரூபாய் பெருமான உதவிகளையும் கருணை உள்ளத்தோடு திரைப்படத்துறையினருக்கும் எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார்.
இத்துடன் வருடா வருடம் எங்கள் சங்க உறுப்பினர்கள் வாரிசுகளுக்கு அவரது SRM கல்லூரியில் பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான இலவச சீட்டுகள் கொடுத்து உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
எனவே, இதுபோன்ற பல நற்பணிகளை செய்து வருகின்ற திரு.பாரிவேந்தரை பற்றி வரும் செய்திகள் தவறாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.