அமெரிக்க விமானங்களை சுட்டுத்தள்ளுங்கள். லஸ்கர் இ தொய்பா தலைவர் ஆவேசம்

அமெரிக்க விமானங்களை சுட்டுத்தள்ளுங்கள். லஸ்கர் இ தொய்பா தலைவர் ஆவேசம்
54c4659fedd61
பாகிஸ்தான் நாட்டிற்கு அத்துமீறி நுழைந்து குண்டு வீசித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க விமானங்களை பாகிஸ்த்ஹான் ராணுவம் சுட்டு வீழ்த்த வேண்டும் என்று லஸ்கர் இ தோய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் ஆவேசமாக கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கான் எல்லைப்பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்கி வருகின்றன. இந்த தாக்குதலில் சிலசமயம் தீவிரவாதிகளோடு பொதுமக்கள் பலியாகி வருவதால் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் இறையாண்மையை மற்ற உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்று சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கூறியுள்ள நிலையில் லஸ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் இதுகுறித்து கூறியபோது, “பாகிஸ்தானுக்குள் நுழைந்து குண்டு வீசும் அமெரிக்க விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்த வேண்டும். ராணுவ தளபதி, விமானப்படை தளபதிகளிடம் இதனை வேண்டுகோளாக வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply