சீஸ் சேவ் உருண்டை
தேவையானவை: ஆலூ பூஜியா அல்லது பூஜியா சேவ் (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) – ஒரு கப், சீஸ் க்யூப்ஸ் – 2 (சிறிய துண்டுகளாக்கவும்), எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: பூஜியாவை தட்டில் பரப்பி தண்ணீர் தெளித்து 10 நிமிடம் வைக்கவும். கையால் லேசாக நொறுக்கி, பிசையவும். இதை சிறிய உருண்டைகளாக்கி நடுவில் குழி செய்து, சீஸ் துண்டை வைத்து மூடி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.