விஜய்மல்லையாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ். இண்டர்போலிடம் அமலாக்கத்துறை விளக்கம்

விஜய்மல்லையாவுக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ். இண்டர்போலிடம் அமலாக்கத்துறை விளக்கம்
vijay mallaiya
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ஐடிபிஐ வங்கியில் வாங்கிய கடனை செலுத்தவில்லை எனக்கூறி அவருக்கு சொந்தமான ரூ.1411 கோடி  மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அதிரடியாக முடக்கியது.
இதுகுறித்து பிரிட்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழும் விஜய்மல்லையா கருத்து கூறியபோது, ‘எனக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியதில் எவ்வித சட்ட ரீதியிலான அடிப்படை ஆதாரமும் இல்லை. எனது தரப்பு நியாயத்தை தெரிவிக்க அனுமதி அளிக்காமல் என்னை குற்றவாளியாக்க விசாரணை அமைப்புகள் முயல்கின்றன. வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாதவாறு அமலாக்கதுறை தொந்தரவு அளிக்கின்றது.

கடன் விவகாரத்தை விவாதிப்பதற்கு குழு ஒன்றை அமைக்குமாறு வங்கிகளிடம் நான் கேட்டுக் கொண்டுள்ளேன். கடனை ஒரே தவணையில் செலுத்துவது குறித்து அந்தக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்று கூறியுள்ளார்.

இதனிடையே விஜய் மல்லையாவுக்கு எதிராக கருப்புப்பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தற்போது புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து விசாரணையில் நேரில் ஆஜராகாததால், விஜய் மல்லையாவுக்கு எதிராக சர்வதேச ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கக்கோரி இன்டர்போலிடம் அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்தது.

இந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பு, அமலாக்கத் துறையிடம் சில தகவல்களை இன்டர்போல் கடந்த வாரம் கேட்டிருந்ததாகவும், அந்தத் தகவல்களை, இன்டர்போலிடம் அமலாக்கத் துறை அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பதால், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ,வங்கிகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது

Chennai Today News: Enforcement explained to Interpol about Vijay Mallaiya

Leave a Reply