பயிற்சியாளர் மீது ரூ.47 கோடி நஷ்டஈடு. அமெரிக்க நீதிமன்றத்தில் சில்வர்ஸ்டார் ஸ்டோலன் வழக்கு
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வர்ஸ்டார் ஸ்டோலன் நடித்த ராக்கி, ராம்போ உள்பட ஏராளமான சூப்பர் ஹிட் ஆகி பல மில்லியன் டாலர்களை சம்பாதித்து கொடுத்தது. இந்நிலையில் சில்வர்ஸ்டரின் தனி பயிற்சியாளர் ராபர்ட்பிளட்சர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்த முடிவு செய்தார். இருவரும் இணைந்து இந்த நிகழச்சியை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி கடந்த சில மாதங்களாக திட்டமிட்டனர்.
இந்நிலையில் சில்வர்ஸ்டார் ஸ்டோலனின் தனி பயிற்சியாளர் திடீரென இருவரும் இணைந்து திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவின் இன்னொரு பகுதியில் தனியாக நடத்தினார். இதற்கு ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்ததோடு ஏராளமான வசூலும் குவிந்தது.
இது முழுக்க முழுக்க நாங்கள் இருவரும் இணைந்து திட்டமிட்டு வைத்திருந்த நிகழ்ச்சி. எங்களது சிந்தனையில் உருவானவற்றை எனது பயிற்சியாளர் திருடி தனது நிகழ்ச்சிபோல நடத்தி உள்ளார். இதற்கு நஷ்ட ஈடாக தனது பயிற்சியாளர் 7 மில்லியன் டாலர் நஷ்டஈடு தரவேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பின் படி இந்த தொகை ரூ.46 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.