சீன பிரதமருடன் ஜெர்மனி பெண் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முக்கிய ஆலோசனை
உலகின் சக்தி வாய்ந்த பெண்மணி என சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தற்போது சீனாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். நேற்று சீனத்தலைநகர் பீஜிங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீனா பிரதமர் லி கிகுவாங்க் அவர்களை இன்று சந்தித்து பேசிய ஏஞ்சலா மெர்கலா, சீனாவில் ஜெர்மனி தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்தார். இருநாட்டு உறவுகளை மேம்படுத்த மெர்கல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு லி பாராட்டு தெரிவித்ததாகவும் பல்வேறு துறைகளில் இரு நாட்டு அரசுகளும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் என்று சீன பிரதமர் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அதிரபான பிறகு ஏஞ்சலா மெர்கல் சீனாவிற்கு 9-வது முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ஜெர்மனி அமைச்சர்கள் மற்றும் 20 பேர் கொண்ட தொழிலதிபர்கள் குழுவும் உடன் வந்தது. அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளுக்கு அடுத்தபடியாக ஜெர்மனியுடன் அதிக அளவில் வர்த்த உறவு கொண்டுள்ள 4-வது நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது. இருநாடுகள் இடையே 163 பில்லியன் யூரோ அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.