தித்திப்பான தேங்காய் லட்டு செய்முறை விளக்கம்
எளிமையான முறையில் தித்திப்பான தேங்காய் லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தித்திப்பான தேங்காய் லட்டு செய்முறை விளக்கம்
தேவையானப் பொருட்கள் :
தேங்காய் – 2 கப் (துருவியது)
கண்டென்ஸ்டு மில்க் – 2 கப்
சீனி – 1 கப்
ஏலக்காய் பொடி- 1 டீஸ்பூன்
பாதாம் – ஒரு கைப்பிடி
வெண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை :
* முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். கொதிக்கும் போது அவ்வப்போது லேசாக
கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய தேங்காய் சேர்த்து, நன்கு கிளறி 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.
* அடுத்து அதில் சீனியை சேர்த்து, சீனி கரையும் வரை கிளறி விட்டு, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து 2 நிமிடம் கிளறிய பின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.
* கலவையானது மிதமான சூட்டில் இருக்கும் போது, கையில் வெண்ணெய் தடவி, அதனை லட்டுகளாக பிடித்து, ஒவ்வொன்றின் மீது
பாதாமை வைத்தால், சுவையான தேங்காய் லட்டு ரெடி!!!