அமெரிக்காவுக்கு குடிபெயரும் முஸ்லிம்களுக்கு தடை விதிக்க வேண்டும். டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவுக்கு குடிபெயரும் முஸ்லிம்களுக்கு தடை விதிக்க வேண்டும். டொனால்ட் டிரம்ப்

donaldஅமெரிக்க அதிபர் வேட்பாளாராக குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள டொனால்ட் டிரம்ப் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக அவர் கூறும் கருத்துக்கள் சர்ச்சைக்குரிய வகையில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ஒர்லண்டோ நகரில் இரவு விடுதி ஒன்றில் நியூயார்க்கை சேர்ந்த ஒமர் மதீன் என்ற தீவிரவாதி வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் பலியாகினர். இது அமெரிக்க மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் கூறியபோது, “அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயரும் முஸ்லிம்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டொனால்ட் மேலும் தனது பேச்சில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் அதிபர் ஒபாமாவை தாக்கி பேசினார்.

Leave a Reply