2 போட்டியிலும் தோல்வி. ஜிம்பாவே வீரர்களை கைது செய்க. ரசிகர்கள் கொந்தளிப்பு

2 போட்டியிலும் தோல்வி. ஜிம்பாவே வீரர்களை கைது செய்க. ரசிகர்கள் கொந்தளிப்பு

zimbabweஇந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாவேவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியிடம் தங்கள் நாட்டு அணி படுதோல்வி அடைந்ததால் ஜிம்பாவே கிரிக்கெட் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். ஜிம்பாவே வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால்தான் தோல்வி அடைந்ததாகவும், அவர்களை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று ஜிம்பாவேவில் கிரிக்கெட் ரசிகர்கள் வீரர்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் ஊர்வலமாக சென்றனர். அதில் ஒரு ரசிகர் தன் கையில் வைத்திருந்த பதாதையில் ‘‘ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களை கட்டாயம் கைது செய்ய வேண்டும். அவர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் ‘‘நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்’’ என்று எழுதியுள்ளார். இன்னொருவர் ‘‘எம்.எஸ்., நாங்கள் வருந்துகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிலர் ‘‘பேரழிவிற்கு எங்களால் ஆதரவு கொடுக்க முடியாது’’ என்றும், ‘‘உங்களை நேசிக்கும் ரசிகர்களுக்கு என்னவொரு அவமானம்?’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியா-ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் ஜிம்பாவே தோல்வி அடைந்தால் ரசிகர்கள் கொந்தளித்துவிடுவார்கள் என்றும் இந்த போட்டியில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஜிம்பாவே அணி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply