சீனாவில் ‘பாகுபலி’ ரிலீஸ் தேதி எப்போது? புதிய தகவல்கள்
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் வசூல் ஏற்கனவே ரூ.600 கோடியை தாண்டிவிட்ட நிலையில் தற்போது ரூ.1000 கோடியை தொடும் வகையில் இந்த படம் சீனாவில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.
சுமார் 6500 திரையரங்குகளில் வரும் 24ஆம் தேதி இந்த படத்தை சீனா முழுவதும் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் சீன ரசிகர்களுக்காக இந்த படத்தில் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜமெளலி தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக சீனாவில் வெளியாகும் ‘பாகுபலி’யில் பாடல் காட்சிகள் இல்லை.
சீன டப்பிங் செலவாக ஒருசில கோடி செலவானபோதிலும் அந்நாட்டில் இருந்து குறைந்தது இருநூறு கோடி வசூலாகும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ‘பாகுபலி 2’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பு பத்து வாரங்கள் தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.