அரவிந்தசாமியை அடுத்து வில்லனாகும் கணேஷ் வெங்கட்ராமன்
பிரபல நடிகர் அரவிந்தசாமி ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் வில்லனாக ரீ எண்ட்ரி ஆகி பிரபலம் அடைந்துள்ள நிலையில் மற்றொரு முக்கிய நடிகரான கணேஷ் வெங்கட்ராமனும் ஒரு புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘சென்னையில் ஓர் நாள்’, அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரசன்னாவின் அடுத்த படத்தில்தான் கணேஷ் வெங்கட்ராமன் வில்லனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக ராய்லட்சுமி நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடி ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்காக பிரசன்னா 10 கிலோ உடல் எடையை அதிகரிக்கவுள்ளதாகவும், கணேஷ் வெங்கட்ராமனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவர் தனது உடலை மெருகேற்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரிட்டன் தமிழர் ஒருவர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு விரைவில் டைட்டில் முடிவு செய்யவிருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.