கம்பு மோர்க்களி

கம்பு மோர்க்களி

p106aதேவையானவை: கம்பு மாவு – ஒரு கப், சின்ன வெங்காயம் – அரை கப், வரகரிசி – கால் கப், மோர், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவு நீர் விட்டு, வரகரிசியை அலசிப் போட்டு, உப்பு சேர்த்து, கட்டிதட்டாமல் வேகவைக்கவும். கம்பு மாவில் நீர் விட்டுக் கரைத்து வெந்த வரகரிசியில் ஊற்றி கைவிடாமல் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் இறக்கி ஆறவிடவும். இதுதான் கம்பங்களி.

இந்த களியில் தேவையான அளவு எடுத்து மோர் விட்டுக் கரைத்து, உப்பு சேர்த்து,  சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பருகவும். வெயில் காலத்தில் அமிர்தமாக ருசிக்கும் உணவு இது.
கேழ்வரகு மாவிலும் இதே முறையில் களி செய்யலாம்.

Leave a Reply