அடுத்த ரிசர்வ் வங்கியின் தலைவர் யார்? ஸ்டேட் பாங்க் சேர்மனுக்கு அதிக வாய்ப்பு?

அடுத்த ரிசர்வ் வங்கியின் தலைவர் யார்? ஸ்டேட் பாங்க் சேர்மனுக்கு அதிக வாய்ப்பு?

arundhadhiஇந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருக்கும் ரகுராம் ராஜனுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், பிரதமர் மோடி உள்பட பெரும்பாலான பாஜக தலைவர்கள் ரகுராம் ராஜன் மீண்டும் பதவியில் தொடர்வதை விரும்பினர்.

இந்ந்நிலையில் மீண்டும் ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தான் மீண்டும் அந்த பணியில் தொடரப்போவதில்லை என்று ரகுராம் ராஜன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மேலும் அவர் கல்விப்பணிக்கு சேவை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரகுராம்ராஜனின் இந்த முடிவு பலருக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் அடுத்த கவர்னராக ஒரு பெண் உள்பட ஆறு பேர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஆறு பேர் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

1. உர்ஜித் பட்டேல்: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர்

2. கே.வி.கமாத்: BRICS வங்கியின் தலைவர்

3. அருந்ததி பட்டாச்சார்யா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சேர்மன்

4. சக்திகந்தா தாஸ்: பொருளாதார விவகார துறையின் செகரட்டரி

5. அரவிந்த் சுப்பிரமணியன்: இந்தியாவின் பொருளாதார ஆலோசகர்

6. அரவிந்த் அனாக்ரியா

இந்த ஆறுபேர்களில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரகுராம் ராஜனின் இந்த முடிவு குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியபோது, ‘நாட்டின் கடினமான பொருளாதார சூழல்களின் போது மிகவும் சிறப்பாக பணியாற்றிய ரகுராம் ராஜனுக்கு எனது நன்றி. உங்களைப் போன்றவர்களால்தான் இந்தியாவை வலிமைப்படுத்த முடியும். பிரதமர் மோடிக்கு எல்லாம் தெரியும். அவருக்கு ரகுராம் ராஜன் போன்ற அறிவாளிகள் தேவையில்லை” என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார்

Leave a Reply