சினிமா பி.ஆர்.ஓ சங்க தேர்தல்: புதிய நிர்வாகிகளின் முழுவிபரங்கள்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சமீபத்தில் நடைபெற்று நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்று பதவியை கைப்பற்றியது. நடிகர் சங்க தேர்தலுக்கு பின்னர் ஒளீப்பதிவாளர் சங்கம், எடிட்டர்கள் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகியவை தேர்தல் நடத்தி தங்கள் நிர்வாகிகளை தேர்வு செய்தது. இந்நிலையில் நேற்று பி.ஆர்.ஓ சங்கத்தேர்தல் நடைபெற்றது.
தலைவர், செயலாளர், பொருளாளர் உள்பட 16 பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 58 பேர் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் பி.ஆர்.ஓ சங்கத்தலைவராக டைமண்ட் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ ‘பிலிம்ஸ் நியூஸ் ஆனந்தன்’ அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்ததக்கது.
இந்த சங்கத்தின் மற்ற நிர்வாகிகள் பெயர்கள் பின்வருமாறு:
துணைத்தலைவர்கள்:பி.டி.செல்வகுமார், வி.கே.சுந்தர் தேர்வு
செயலாளர்: ஜான் ஜான்சன்
பொருளாளர்: விஜயமுரளி
துணை செயலாளர்க: நிகில் முருகன், யுவராஜ்
கமிட்டி உறுப்பினர்கள்: சிவகுமார் வெட்டுவானம், மேஜர் தாசன், பிரம்மானா, ஆறுமுகம், கிளாமர் சத்யா, ஷக்திவேல் மற்றும் ரேகா ஆகிய ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.