ஆர்பிஐ ரகசியங்களை வெளிநாட்டுக்கு அனுப்பியவர் ரகுராம்ராஜன். சுப்பிரமணியன் சுவாமி
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன் மீண்டும் பதவியில் நீட்டிக்கப்போவதில்லை என்றும் கல்விப்பணிக்கு திரும்பவுள்ளதாகவும் நேற்று முன் தினம் இணையதளம் மூலம் அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரகுராம்ராஜனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த பாஜகவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி ரகும்ராம் ராஜன் ஒரு காங்கிரஸ் ஏஜண்ட் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்பிஐ தொடர்பான ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு ரகுராம் ராஜன் அனுப்புவதாகவும் வட்டி விகிதத்தை குறைக்காமல் பொருளாதாரத்தை சீர்குலைப்பதாகவும், அவர் மனதளவில் இந்தியர் இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மேலும் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு ரகுராம் ராஜன் காங்கிரஸின் ஏஜெண்டாக செயல் படத் தொடங்கியதாகவும் ராகுல்காந்தியின் கருத்து காரணமாக இது நிரூபணமாகியுள்ளதாகவும் சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.