3 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட மிதக்கும் பாலம். அமெரிக்க நிபுணர் சாதனை
தண்ணீரில் மிதந்தபடி மனிதர்களால் நடக்க முடியுமா? ஒருசில முனிவர்கள், தேவர்கள் நடந்ததாக புராணங்களில் கூறப்படுவதுண்டு. ஆனால் சாதாரண மனிதர்களும் தண்ணீரில் மிதந்தபடி நடக்க முடியும் என்பதை அமெரிக்காவை சேர்ந்த ஒரு கட்டிடக்கலை நிபுணர் நிரூபித்துள்ளார்.
ஆம் இத்தாலியில் உள்ள ஐசியோ ஏரியில் இருந்து மோண்டி ஐசோலோ என்ற சிறிய தீவு ஒன்றுக்கு மிதக்கும் பாலம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த பாலத்தின் நீளம் 1.9 மைல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிதக்கும் பாலத்தில் நடக்கும்போது தன்ணீரில் நடப்பதுபோன்ற உணர்வு ஏற்படுவதாக சுற்றுலாப் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பாலம் கடந்த சனிக்கிழமை அன்று திறக்கப்பட்டபோது சுமார் 55,000 பேர் வரை இந்த பாலத்தில் நடந்துள்ளனர். ஆரஞ்சு நிற மிதக்கும் ரப்பர் டியூபின் உள்புறத்தில் சுமார் 200,000 கியூப்கள் நிரப்பப்பட்டு இந்த பாலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பாலம் அமைக்க $16.7 மில்லியன் செலவானதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.113 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.