மருத்துவப் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது
முதல் நாளான இன்று 735 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
2016-17ம் ஆண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது.
முதல்நாளான நேற்று சிறப்புப் பிரிவினர், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
இன்று, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி உள்ளது. இதில் 200-லிருந்து 198 வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள சுமார் 750 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 9 மணியளவில் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
முன்னதாக எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அனுமதிக் கடிதத்தை வழங்கி உள்ளார். தொடர்ந்து ஜூன் 25-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.