அமெரிக்க பொருளாதாரத்திற்கு பேராபத்தாக திகழ்பவர் டொனால்ட் டிரம்ப். ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசு கட்சியின் சார்பில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்..
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் அதிபரானால் அமெரிக்க பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றுவிடுவார் என்று ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரச்சார உரையொன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பேராபத்தாக திகழ்வார். டிரம்பின் வரி விதிப்பு திட்டமானது பணக்காரர்களுக்கே பயன் உள்ளதாக இருக்கும். டொனால்ட் டிரம்ப் தான் அதிபர் பதவிக்கு தகுதியானவர் என்று தொழில் சாதனைகளை வைத்து கூறுகிறார்’ என்று கூறினார்.
அமெரிக்க ஊடகங்களின் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஹிலாரி கிளண்டனே வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளது. இதனால் அமெரிக்க வரலாற்றில் விரைவில் ஒரு பெண் அதிபர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹிலாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.