ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்குமா? விலகுமா? இன்று வாக்கெடுப்பு

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்குமா? விலகுமா? இன்று வாக்கெடுப்பு

britainஐரோப்பிய யூனியனில் இருந்து விலகலாம? வேண்டாமா? என்பது குறித்த பொதுமக்கள் வாக்கெடுப்பு இன்று பிரிட்டனில் நடைபெறுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்கெடுப்பின் முடிவை ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் உள்பட 28 நாடுகள் தற்போது உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் பிரிட்டன் அங்கம் வகிப்பதற்கு எதிராக பிரிட்டனில் ஒரு சாரார் கடந்த சில வருடங்களாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து மக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.

“பிரெக்ஸிஸ்ட்’ என அழைக்கப்படும் இந்த பொது வாக்கெடுப்பில் 4.65 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுகுறித்து பிரிட்டன் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஐரோப்பிய யூனியனுடன் தொடர்ந்து இணந்திருப்பது குறித்து முடிவெடுப்பதற்கான பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக 46,499,537 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
இது பிரிட்டன் வரலாற்றில் ஒரு சாதனை எண்ணிக்கையாகும். இதற்கு முன்னர், கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 46,354,197-ஆக இருந்ததுதான் சாதனை அளவாக இருந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொது வாக்கெடுப்புக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், 25 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறை வாக்காளர்கள் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக பிரிட்டன் தொடர்ந்து நீடிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 65 முதல் 74 வயது வரையிலான வாக்காளர்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து இணைந்திருப்பதற்கு ஆதரவாகவே பொது வாக்கெடுப்பின் முடிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Brexit: the 7 most important arguments for Britain to leave the EU

Leave a Reply