ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் கேதார்நாத் பயணம் ரத்து

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் கேதார்நாத் பயணம் ரத்து
pranab
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று கேதார்நாத் பயணத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் நேற்று வானிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக ஜனாதிபதி மாளிகையின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயில், இமயமலையின் கார்வால் தொடரில் 3,851 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்துக்கள் புனிதமாக கருதும் இந்த கோயிலில் வழிபடுவதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று கிளம்ப தயாரானார்.

ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் கோயில் அருகில் தரையிறங்க முடியவில்லை. விமானி பலமுறை முயற்சி செய்தும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இதனையடுத்து பிரணாப் டேராடூன் திரும்பி தனது கேதார்நாத் பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் பருவமழை நேற்று தொடங்கிய தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply