பாஜகவின் முக்கிய பதவியை பிடித்த விஜய்யின் பி.ஆர்.ஓ
இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், அவரிடம் பல வருடங்களாக பி.ஆர்.ஓவாக பணிபுரிந்து வருபருமான பி.டி.செல்வகுமாருக்கு பாஜகவில் புதிய பதவி கிடைத்துள்ளது.
பாஜகவின் அறிவுசார் பிரிவின் இணை அமைப்பாளர் பதவிக்கு பி.டி.செல்வகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை நேற்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அறிவித்துள்ளார்.
மேலும் கலைப்பிரிவு அமைப்பாளர் பதவிக்கு கங்கை அமரனும், இணை அமைப்பாளராக காயத்ரி ரகும்ராம் அவர்களும் தேர்வு செய்யபட்டுள்ளனர். அதேபோல் கல்வியாளர் பிரிவு அமைப்பாளர் பதவிக்கு ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.