சிம்பு பாடிய குத்துப்பாட்டு குத்துப்பாட்டு யாருக்காக தெரியுமா?

சிம்பு பாடிய குத்துப்பாட்டு குத்துப்பாட்டு யாருக்காக தெரியுமா?

simbuசிம்பு நடித்த படங்கள்தான் தாமதமாக ரிலீஸ் ஆகும். ஆனால் அவர் பாடிய பாடல்கள் அவருக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் சிம்பு தற்போது குத்துப்பாடல் ஒன்றை பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷூக்காக பாடியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் ‘புரூஸ் லீ’ என்ற படத்திற்காக சிம்பு ஒரு சூப்பர் குத்துப்பாட்டு ஒன்றை பாடியுள்ளதாகவும், இந்த பாடலின் ஒலிப்பதிவின்போதே படக்குழுவினர் ஆட்டம் போட்டதாகவும், இதிலிருந்தே இந்த பாடலின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘நான் ராஜாவாக போறேன்’ என்ற படத்திற்கு பாடியுள்ளார். தற்போது அவருடைய இசையில் சிம்பு இரண்டாவது முறையாக பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புரூஸ் லீ’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், க்ரிதி கார்பனந்தா, ராஜேந்திரன், பாலசரவணன், ஆனந்த்ராஜ், மன்சூரலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply