சாமை சாம்பார் சாதம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி – 4 கப்,
பீன்ஸ், கேரட் – 250 கிராம்,
கத்திரிக்காய், தக்காளி – தலா 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – 8,
துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா – ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 10,
முருங்கைக்காய் – 2,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு, கடுகு, மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தேவையான அளவு,
சாம்பார் பொடி, நெய், சீரகத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:
* சாமை அரிசியை தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும்.
* புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
* காய்கறிகள், தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.
* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துப் தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
* காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது புளிக்கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும்.
* அடுத்து அதில் ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும்.
* ஏழரை கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
* அரிசி வெந்தது குழைந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும்.
* கடைசியாக கொத்தமல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.