ஸ்ரீகால பைரவரை வணங்கு – காசி கயிற்றைக் கட்டு
கால பைரவர், அசிதாங்க பைரவர், பூத பைரவர், பீஷ்ண அல்லது சண்ட பைரவர், கபால பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், ருரூ பைரவர், சம்ஹார பைரவர் மற்றும் ஆனந்த பைரவர் என பத்து விதமான பைரவர் கோயில்கள் உள்ளன.
இவர்களில், காலத்துக்கு அதிபதியான கால பைரவர் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட, எதிரிகளின் தொல்லை ஒழியும். ‘ஸ்ரீகால பைரவரை வணங்கு; காசி கயிற்றைக் கட்டு’ என்பார்கள்.
காசிக்குச் சென்று, ஸ்ரீகால பைரவரை தரிசிக்க இயலாதவர்கள்கூட, அங்கிருந்து பிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசி கயிற்றை, மனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால், கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்!
காலபைரவர் வணங்கிய பின் கையில் காசிக் கயிறு என்ற கருப்பு நிறக் கயிறை கட்ட வேண்டும். இவ்வாறு அந்தக் கோயில் வாயிலில் நம் கை மணிக்கட்டில் கட்டப்படும் காசிக்கயிறு என்னும் கறுப்புக் கயிறு, உடல் நலத்திற்கும், வாழ்க்கை வளத்துக்கும் காப்பாக அமையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
காசிக்கு போவதே நம் பாவங்களைத் தொலைக்கத்தான். அங்கு போய் வந்த பிறகும், ஆசைகளில் சிக்கி நாம் பாவங்களையே செய்கிறோம். அந்த பாவங்களை கரிய இருளுக்கு ஒப்பிட்டு, வலது கையில் கருப்புக்கயிறு கட்டப்படுகிறது.
இந்தக் கயிற்றில் 5 முடிச்சுகள் இருக்கும். ஆணவம், பொறாமை, ஆசை, காமம், உடல் நிலையானது என்ற எண்ணமாகிய மாயை ஆகியவற்றை அந்த முடிச்சுகள் குறிக்கின்றன. இந்த முடிச்சுகளைப் பார்க்கும் நேரமெல்லாம் மீண்டும் இந்த இருளில் சிக்கக்கூடாது என்ற நினைப்பு வர வேண்டும்.
இந்தக் கயிற்றினால் ஏற்படும் பலன்கள் :
1. பயம் போக்கும்;
2.தைரியம் தரும்;
3. கர்மவினைகளை அழிக்கும்;
4. விபத்துகளிலிருந்து காக்கும்;
5. ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போக்கும்;
6. நோய்களையும், தோஷங்களையும் விலக்கும்;
7. தீய கனவுகளை தோன்றாமல் செய்யும்;
8. கடன்களை தீர்க்கும்;
9. பைரவர் அருளை பெருக்கும்.